காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காணாமலாக்கப்பட்டவர்கள் எந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் தெரியப்படுத்தினால் அங்கு தாம் அழைத்துச் செல்வதாக அண்மையில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அதனையே நானும் தெரிவிக்கின்றேன் என ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த வகையில் அப்படி யாரையும் முகாம்களில் மறைத்துவைக்கவில்லை.
அப்போது ராஜபக்சவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது அவர்களை பெற்றிருந்தால் யாரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தயாரென்றால், ஜனாதிபதியும் அதற்கு இணங்கினால் நானும் இதற்கு உதவிபுரிவேன்.ஜனாதிபதி அப்படியான அறிவிப்பொன்றை விடுத்தார். அதற்குப் பின்னர் இதுகுறித்து நான் அவரிடம் வினவவில்லை. ஆனாலும் ஜனாதிபதி பொய்யை கூறவில்லை. ஜனாதிபதி உண்மையாகவே அதனை தெரிவித்தார். இருந்த போதிலும் முடியாது என்று ஜனாதிபதி தெரிவிக்காத பட்டிசத்தில் அவர்கள் தயாரென்றால் அவர்களை எந்த இடத்திற்கும் அழைத்துச்செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த இடத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமென அவர்கள் கோரினால் அவர்களை நாங்கள் அழைத்துச்செல்வோம். எனது கருத்தை நான் உண்மையாக கூறுகிறேன். அதனை தெரிவிக்க அநேக சிங்களவர்களுக்கு அச்சம் உள்ளது. அவர்கள் உயிருடன் இல்லை. எனத் தெரிவித்தார்.