- Thursday
- May 21st, 2026
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நுணாவில், கைதடி, நாவற்குழி,...
வலி. வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை, இராணுவத்தினர் அகற்றி அவற்றை கொண்டு சென்றமை தொடர்பில், எமக்கு எதுவும் தெரியாது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பார்த்துக்கொள்ளும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை வடக்கு குரு வீதி...
இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு உள்ளகப்பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் தற்போது யாழ்போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், எதிர்வரும் நவம்பர்...
உலக வெப்பமயமாதல் காரணமாக எதிர்வரும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போது யாழ்ப்பாணத்தை...
முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திராதிகள் உதவியுடன் அந்த பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல்...
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்களாம் என சந்தேகிக்கப்டுகின்றது. குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளது இத்தீ வைப்பினால்...
பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிட வேண்டும் என்று நாம் மனதளவில் உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று...
பொன்னாலை தொடக்கம் திருவடி நிலை வரையான காடு நேற்றைய தினம் தீப்பற்றி எரிந்ததில் பல ஏக்கர் கணக்கான காடு நாசமாகியுள்ளது. நேற்று முற்பகல் 10 மணியளவில் மேற்படி காடு தீப்பற்றி எரிவதைக் கண்ட உத்தியோகத்தர்கள் சிலர் அது தொடர்பாக வலி. மேற்கு பிரதேச செயலாளர் செல்வி பிறேமினி மற்றும் பிரதேசத்திலுள்ள கடற்படையினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்....
தெற்கில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு மக்களிடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள உலர் உணவு உள்ளிட்ட பல பொருட்கள் இன்று தெற்கிற்கு எடுத்துவரப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கத் திணைக்களங்களின் பூரண ஒத்துழைப்புடன் வடக்கில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களே இன்று எடுத்துவரப்படவுள்ளன. இந்த பொருட்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,...
தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலைப்பழி சுமத்தி கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்...
யாழ். கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் உள்ள கால்நடைகளின் இறப்புக்கள் திடீரென அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள குடிமனைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அண்மைக்காலமாக தோல் நோய்கள் தொடர்ச்சியாக...
நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் அதிகளவானோர் தொழிலுக்காக எம்மை நாடி வருகின்றனர். அத்தகைய மாணவர்கள் தொழில்சார் கல்வியை கற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்புகளைப் பெறமுடியும். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரே தொழிநுட்ப கல்லூரியில் போதுமான இட வசதிகள் இருந்தும் சுமார் 500 மாணவர்கள் பயிலும் கல்லூரியில் வெறும் 15 தமிழ் மொழிமூல மாணவர்களே...
ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதகா தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று...
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐயும் தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்ற அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
எவராக இருப்பினும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என வட. மாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆராச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத் தலைவர் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன்...
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக மேலதிகமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட...
அவுஸ்ரேலியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்மிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள குறித்த பயணி, விமானியின் அறைக்குள் பிரவேசிக்கவும் முயன்றுள்ளார். இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும், சாமர்த்தியமாக செயற்பட்ட சக பயணிகள் குறித்த பயணியை மடக்கிப்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு...
யாழில் இடம்பெற்று வந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல், சன்னா ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால்...
Loading posts...
All posts loaded
No more posts
