Ad Widget

வவுனியாவில் ஐவருக்கு மரண தண்டனை

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆராச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத் தலைவர் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அவரது மனைவி ரோகினி தமயந்தி என்பரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனை அடுத்து கடந்த 25.01.2014 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதையடுத்து குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டள்ளதால் ரோகினி தமயந்தி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையிட்ட குற்றத்திற்காகவும் அருகில் இருந்த சிவகுமார் இந்துமதி என்ற பெண்னை கொலை செய்த குற்றத்திற்காகவும் வி.கனகமனோகரன் என்ற இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடித்த குற்றத்திற்கு 10வருட சிறைத்தண்டனையும் சி.இந்துமதி என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்கு மரண தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Related Posts