Ad Widget

தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதை ஏற்க முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

எவராக இருப்பினும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என வட. மாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தெரிவித்த அவர், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன்படி காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சடடத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என்றும், அவர்கள் தொடர்பில் உறவினர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளட்டும் எனவும் வட. மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான ஆளுநரின் இவ்வாறான கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மை கண்டறிப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Related Posts