Ad Widget

கிணற்றுடன் சேர்த்து வெடிபொருட்கள் அழிப்பு

தையிட்டி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்த பெருமளவு வெடி பொருட்கள், கிணற்றுடன் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை (28) முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில், பெருமளவு வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கிணறு காணப்பட்டது.

கிணற்றிலிருந்த வெடி பொருட்களை ஹலோ ட்ரஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனமும், படையினரும் இணைந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

கிணற்றில் அதிகளவு நீர் காணப்பட்டதன் காரணமாக, வெடி பொருட்களை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், வட மாகாண பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்தின் உத்தரவுக்கு அமைய, குறித்த வெடி பொருட்கள் கிணற்றில் வைத்து, அதிசக்தி வாய்ந்த ரீ.என்.ரி. வெடிமருந்து மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts