Ad Widget

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை : முதலாவது ரயலட்பார் அமர்வு

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள தமிழ்மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை நேற்று நடாத்தியுள்ளது.



இதன் முதல் அமைர்வின் போது இந்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ். மேல் நீதிமன்ற ரயலட்பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூன்று தமிழ் மொழி பேசும் நீதிபதிகளும் நேற்றய தினம் முதல் தடவையாக அமர்வில் ஒன்று கூடியிருந்தனர்.



நேற்று மாலை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதான அறையில் ஒன்று கூடிய குறித்த மூன்று நீதிபதிகளும் இந்த வழக்கின் முதல் ஒன்பது பிரதிவாதிகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன் இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரத்தை அன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற ரயலட்பார் நீதிமன்றில் தாக்கல் செய்யவும் சட்டமா அதிபர் சார்பிலான சட்டவாதிகளை மன்றில் முன்னிலையாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்திருக்கு பணிந்திருந்தனர்.


Related Posts