Ad Widget

மயிலிட்டிப் பிரதேசம் அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும்: மாவை

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் படையினர் வசம் இருக்கின்ற காணிகள் குறித்தும் அதனை விடுவிக்க வேண்டியது குறித்தும் தாங்கள் அரசாங்கத்துடன் பேசியுள்ளதாகவும் பல விடயங்கள் தொடர்பில் தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அ தற்கமைய, எதிர்வரும் 2 மாத காலத்துக்குள், வலி. வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கை உள்ளதெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

Related Posts