Ad Widget

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைவு

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த ஒரு வருட காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் நால்வர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையப் பயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க, சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட காலமாக புனர்வாழ்வு பெற்ற கிளிநொச்சியை சேர்ந்த சற்குணசிங்கம் தயாபரன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னராசா துஷ்யந்தன், ஒட்டுச்சுட்டானை சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன், பேலியகொடயை சேர்ந்த அஜித் ரோஹண ஆகிய நான்கு பேர் தங்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வில், பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேர்ணல் ஹேமிடோன், சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிஸார், விமானப்படையினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts