Ad Widget

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்: இரகசிய உடன்படிக்கை கைச்சாத்து

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும்- அமெரிக்காவிற்கும் இடையே இரகசிய உடன்பாடொன்று கையெழுத்தாகியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அதன்படி திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் குறித்த கடற்படை தளத்தை அமைப்பதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவிடமிருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான போர் விமானங்கள் மற்றும் 300 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ தளபாடங்கள் என்பவற்றை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத சூழலில் எதற்காக போர் விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் எதற்காக பொதுமக்களின் நிதி வீணாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts