Ad Widget

வடக்கு பல அபிவிருத்தி பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளது

கிளிநொச்சி மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு, பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாமை, முறையான நகர் திட்டமிடல் இல்லாமை, பாரிய தொழிற்சாலைகள் மீள இயங்காமை, குளங்கள் புனரமைக்கப்படாமை, நன்னீர் மீன்பிடி தொழில் வளர்ச்சியடையாமை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் சிக்குண்டுள்ளது.

இந்த நிலையில் விசேட அபிவிருத்தி திட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங் கிணைப்புகுழு இணை தலைவர்களில் ஒருவருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தி ன் அபிவிருத்தி தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியபோதே அவர் இதனை கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய தொழிற்சாலைகள் இயங்காமை.

வட்டக்கச்சி விவசாய பண்ணை மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆணையிறவு உப்பளம், குறிஞ்சா தீவு உப்பளம் போன்ற பாரிய தொழிச்சாலைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்றன.

குறிப்பாக வட்டக்கச்சி விவசாய பண்ணை பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதுடன் அங்கிருந்த விவசாய பாடசாலை 1983 காலப்பகுதியில் சுமார் 300 பேருக்கு வருடாந்தம் பயிற்சிகளை வழங்கி வந்திருக்கின்றது.

ஆனால் அந்த பண்ணை தற்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சிவில் பாதுகாப்பு படையின் பயன்பாட்டில் உள்ளது.

அதேபோல் பரந்தன் இரசாயன தொழிற்சாலை மிக நீண்டகாலமாக இயக்கப்படாமல் உள்ளது.

சிறிது காலத்திற்கு முன்னர் மத்திய தொழிற்துறை அமைச்சு சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் அதனை மீள இயக்கப்போவதாக கூறியபோதும் அதற்கு பின்னரான அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

எனவே எதிகாலத்தில் அபிவிருத்தி பணிகளின் போது குறித்த தொழிற்சாலைகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts