Ad Widget

வித்தியா கொலை வழக்கு: ட்ரயல் அட் பார் நீதிபதிகள் விசேட சந்திப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கினை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ட்ரயல் அட் பார் நீதிபதிகள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி படுகொலை வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் நடத்துவதற்கு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் பரிந்துரை வழங்கியிருந்தமைக்கு அமைவாகவே இவ்வழக்கு விசாரணை குறித்துக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில்,யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் மேற்படி தீர்ப்பாயத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய சந்திப்பில், குறித்த வழக்கின் விசாரணைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாகவும், சாட்சியப்பதிவுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts