முதலமைச்சர் பாரமுகமாக நடந்து கொள்வது ஏன் : புத்தூர் மக்கள்

தமது சாத்வீகப் போராட்டம் 64 நாட்களினை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில், அவர் தமது கோரிக்கையினை கேட்டறியக் கூட முன்வரவில்லை என புத்தூர் கலைமதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். புத்தூர் கலைமதி பகுதியில் அமைந்துள்ள இந்துமயாணத்தினை அகற்றுமாறு கோரி பிரதேச...

வடக்கின் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்கள் முரணாக வெளியிடுகின்றன! : முதலமைச்சர் சி.வி

வடக்கு மாகாணத்தில் தான் தெரிவிக்கும் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்கள் முற்றிலும் முரணான வகையில் சித்தரித்து செய்தி வெளியிட்டு தன்னை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம்மேற்கொண்ட சுதந்திர ஊடக இயக்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு...
Ad Widget

யாழில்.ஊடகவியலாளர் வீட்டில் 51 பவுண் நகை திருட்டு

யாழில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் 51 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் வசிக்கும் சிரேஸ்ட ஊடகவியலாளரான இரட்ணம் தயாபரனின் வீட்டிலையே இந்த திருட்டு சம்பவம் நேற்று புதன் கிழமை மதியம் இடம்பெற்று உள்ளது. வீட்டில் இருந்து கணவன் , மனைவி வேலைக்கு சென்று இருந்த சமயம் பிள்ளைகள்...

யாழில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தேங்காய் உடைத்து போராட்டம்

வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் நேற்று (13) நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும்...

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

ஜனாதிபதி கையொப்பமிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (12) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவது அவசியமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதி...

இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து போராட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐந்து பேரது இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு மேற்படி...

கஞ்சா பயிரிடும் இலங்கை இராணுவம்!

நாட்டில் யுத்தம் இல்லாததால், இராணுவ வீரர்களைக் கொண்டு கஞ்சா வளர்க்கும் முயற்சியை மேற்கொள்வதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அவசியமான மூலிகை மருத்துவத்திற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கஞ்சா மற்றும் அபின் என்பவற்றை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களின் அடிப்படையில், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்ததாகவும்...

பகல் கொள்ளையில் ஈடுபட்டவர் பொதுமக்களினால் நையப்புடைப்பு

பருத்தித்துறை –யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் நேற்று(13) மதியம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட முற்பட்ட சமயம் குறித்த நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். பிடித்த இளைஞனை அப் பகுதி...

வித்யா படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி!!!

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கின் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஜனாதிபதி தலைமையில் தேசிய விவசாய வாரம்!

தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் ஒருவார காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னாயத்தமாக மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று...

வித்தியா வழக்கில் கைதான லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதி!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 3 லட்சம் பெறுமதியான காசுப் பிணையிலும்,...

சிநேகம் பேசி ஏமாற்றினார் மஹிந்த ; முதலமைச்சர் சி.வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், "மஹிந்த - சிங்கள செல்பி" என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில்...

சாவச்சேரியில் மீண்டும் கொடூரமான வாள்வெட்டு!

சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் புகுந்த அடையாளம் தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய...

சிகரெட்டின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்!

2020ஆம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியானது முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புகையிலை உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதத்தினால்...

தரம் 5 பரீட்சையில் சிக்கல், உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் : கல்வி அமைச்சர்

இவ்வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளிலுள்ள வினாவில், சிக்கல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். கணித வினாத்தாளில் இரண்டாம் பகுதியில் 39 ஆவது வினா தொடர்பான விடையில் சிக்கல் காணப்படுவதாக விசனம்...

இன்று முதல் மின்சார சபை ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நுகர்­வோரின்...

ஜெனீவாவுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு, வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், ஆ. புவனேஸ்வரன், தியாகராஜா...

புலிகளின் முன்னாள் உறுப்பினர் மேன்முறையீடு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி காலிங்க...

வித்தியா படுகொலை வழக்கு: இருவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிரான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்ட வில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய “ட்ரயலட் பார்” முறையில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று...

ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை: அரசாங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கு அரசாங்கம் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாகவும், அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய அதன் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை மீது...
Loading posts...

All posts loaded

No more posts