- Monday
- May 18th, 2026
வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது
இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித்...
இலங்கையின் தென்னிலங்கையை ஆட்டிப்படைத்த பாரிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு, தற்போது வடக்கு மாகாணத்திலும் தீவிரமாக பரவியுள்ளது. டெங்கு நோய் தாக்கத்தால், யாழ்ப்பாணத்தில் தாயொருவரும் பாடசாலை மாணவி ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். யாழ். பொஸ்கோ பாடசாலையில் கல்வி கற்று வந்த கணேசமூர்த்தி சாரா (வயது-9) என்ற மாணவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22 நாட்களாக இவர்கள் உணவை தவிர்த்து வரும் நிலையில், இரண்டு கைதிகளுக்கு சேலைன் ஏற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம்...
வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து...
தொண்டர் ஆசிரிய நியமன நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி அவசர கடிதம் ஒன்றினை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது. வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி...
வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து...
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மட்டக்களப்பு,காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர்...
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வருமுன், பல கைகள் மாறியே வருகின்றது. அந்தக் கைகளுக்குள்...
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரேயை சந்தித்துள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஷ் வேலாயுதம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், குழுக்கள் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “சட்டத்தின் தேவைகளுக்கு அமைய...
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்...
பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் கண்டிக்கின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மாகாணங்களிலும் பௌத்தர்கள் அதிகமாக வாழ்வதால் அவற்றில் பௌத்தத்திற்கு முன்னுரிமைகொடுக்கலாம். ஆனாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களோ சமஸ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும...
அனுராதபுரச் சிறையில் உண்ணவிரதம் இருக்கும் கைதிகள், ஈழத் தமிழர்கள் தமக்காக முன்னெடுத்த கடையடைப்பு உள்ளிட்ட ஆதரவுப் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தல் கடும் உடல் நலப் பாதிப்பிற்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர். தமக்கான தீர்வு இனியும் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரையிலான கடும் உண்ணாவிரதப் போருக்கு அவர்கள் தயாராகி உள்ளனர். தற்போதைய உண்ணாவிரதப் போரில் தரப்படும்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார். யாழ். இந்துக்கல்லூரியின் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரிக்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை...
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற...
யாழில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்ள விடாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அகில இலங்கை தமிழ் மொழித் தினம் (இன்றையதினம்) யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு இருந்தார். குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ்.இந்துக்கல்லூரியின் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னதாக செய்யப்பட்டு இருந்தன. எனினும் இன்றைய...
தற்போது நிலவி வரும் இடைநிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மாலை நேரங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை விழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் காலநிலை அவதானியுமான கே.ஆர்.அபேசிங்க தெரிவித்துள்ளார். மின்னல், மழை, டொனாடோவை ஏற்படுத்தும் மழை மேகங்களில் மேற்பரப்பில் சுமார் 8 கிலோ மீற்றர் வரை 95 வீதம் பனி படிந்திருப்பதாகவும்...
Loading posts...
All posts loaded
No more posts
