- Monday
- May 18th, 2026
தேசிய தமிழ் தின விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தற்போது விவசாய உற்பத்திகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான புத்தூர், நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார். இதேவேளை, தேசிய தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா...
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன்...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத் திடலில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் வைபவம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம்...
"உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்" என, வவுனியா மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேற்று (13) பார்வையிட்டதன் பின்னர், வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தங்கள்...
ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது, நகரப்பகுதி மற்றும் நிகழ்வு இடம்பெறும் இடங்களில் போராட்டம் மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க முடியாதவாறும் யாழ்.பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்றுள்ளனர். தேசிய தமிழ் தின நிகழ்வு யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்....
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும், ஹர்தாலும் இடம்பெற்றுள்ள நிலையில் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் வைத்து...
வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் 50 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொண்டு, திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் எனவும், இந்த வீடமைப்பு திட்டத்திற்காக...
பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைச் செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்ட போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விகளுக்கு...
இலங்கைக்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் அதிகாரி பெப்பலோ டி கிறீப் குழுவினருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதய நிலைமைகள், மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் நடடிவக்கைகள் தொடர்பிலும்...
நாட்டில் மேக மூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை...
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு, மீண்டெழும் செலவினத்துக்கு 18,650,939,000 ரூபாவும், மூலதனச் செலவுக்கு...
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஏ9 வீதியை மறித்து போராட முற்பட்ட யாழ் பல்கலைக்கழக ஊழிய சங்க இணைச் செயலாளரை பொலிஸார் ஒருவர் காலால் தட்டிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் அவர்களது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளார். இதன் பிரகாரம்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 12 ஒக்ரோபர், 2017 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம் கொழும்பு...
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான ஊடகஅறிக்கை 12-10-2017 வவுனியாமேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்தவழக்குகள் மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும்,கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர்கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான...
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்....
“வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஆனால், நாட்டில் அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை.இதனை கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் வழிநடத்தல் குழுவிலும் இல்லை. அதனை கொண்டு வருவதற்கான சாத்தியம் அரசாங்கத்துக்குள்ளும், நாட்டுக்குள்ளும் கிடையாது.அந்த உண்மையை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதில்...
வட. மாகாணத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வட.மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமது வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றக் கோரியும், வழக்குகளை துரிதமாக விசாரித்து...
ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று மாலை ரயில்வே சாரதிகள், அரசாங்க அதிகாரிகளுடன்...
Loading posts...
All posts loaded
No more posts
