- Monday
- May 18th, 2026
தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பேருந்து நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பாகும் என்றும் அறியகிடைத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட, அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி வட. மாகாணம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து சமூகங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுர சிறையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வழக்கு...
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் வகையில், வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பொன்று வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலை அடுத்து, குறித்த அமைப்பு உதயமாகியுள்ளது....
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்களில் 99 வீதமானோர் நல்லொழுக்கம் மிக்கவர்கள் என்றும், ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஏனையோரை மதிப்பிடமுடியாதென்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வடக்கில் செயற்படும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு...
கிளிநொச்சி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றுடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியாருக்கு சொந்தமான குறித்த பேரூந்து ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில்...
யாழ்ப்பாணம் காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியெங்கும் பெரும் பாரிய புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறான...
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றயதினம் (11) பிற்பகல் 3.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகவும் ஏன்...
இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல்,...
காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு இன்று பொலிசாரால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து, இன்று (புதன்கிழமை) காலை இந்த வழிபாட்டை நடத்தியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற...
கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேரூந்தே விபத்தில் சிக்கியுள்ளது. இதன்போது பேரூந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேரூந்து வீதியில் அமைந்திருந்த பாலத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகுpறது. இச்சம்பவம் தொடர்பான...
கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர்...
யாழ்.அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கு, நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், நாவற்குழி பகுதியை சேர்ந்த சஜீவன் (வயது – 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற மோட்டார்...
தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14, 15 திகதிகளில் யாழ்ப்பாணம் யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இரண்டாம் நாள் நிகழ்வில் பட்டிமன்றம் பரதநாட்டிய நிகழ்வுகள் கலைஞர்களுக்கு விருதுவழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான பாரத கலாஞ்சலி வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும்...
வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி பகுதியில் குடும்பநிலை காரணமாக நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்று வாராந்தம் அதற்குரிய பணத்தைச் செலுத்தி வந்துள்ளார். அண்மைக் காலத்தில் அவரால் வாராந்தம் குறித்த பணத்தொகையினைச் செலுத்த...
வடக்கு மாகாணசபை சரியாக இயங்கும் பட்சத்தில் எமது மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முறையீடு செய்துள்ளனர். அத்தோடு குறித்த ஏழு குற்றவாளிகள் சார்பிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
விடுதலைப் போரில் விடுதலை புலிகள் சாா்பில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர்...
Loading posts...
All posts loaded
No more posts
