Ad Widget

யாழ்ப்பாணத்தில் லியோனியின் பட்டிமன்றம்

தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14, 15 திகதிகளில் யாழ்ப்பாணம் யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இரண்டாம் நாள் நிகழ்வில் பட்டிமன்றம் பரதநாட்டிய நிகழ்வுகள் கலைஞர்களுக்கு விருதுவழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான பாரத கலாஞ்சலி வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறும். இதில் 20இற்கும் மேற்பட்ட இந்திய பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொள்ளும் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

மேலும் வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள், வியாபார துறையில் மிளிர்ந்தவர்கள் மற்றும் சிறந்த சேவையாற்றிய ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இதேவேளை ஆரம்ப நிகழ்வு உள்ளிட்டசகல நிகழ்வுகளும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

Related Posts