உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

அரசாங்கத்தை எச்சரிக்கிறார் முன்னாள் இராணுவ அதிகாரி!!

இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர், “ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக...
Ad Widget

யாழில் வட்டிக் கடன் திட்டங்களுக்கு எதிராக மாபெரும் பேரணி

கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டிக் கடன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண நகரில் இன்று முற்பகல் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது. யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி யாழ். பிராதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு யாழ்.மாவட்ட செயலாளரிடம் மனு...

வட. மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலை கிளிநொச்சியில்!

வடக்கு மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலையை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கும் நோக்கில் நிதி வழங்குனர்களுடன் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 4.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள விசேட...

நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி!! -பலத்த காற்றும் வீசலாம்!!

வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். ஏனைய இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

அம்பாறை நகரில் பதற்றம் : முஸ்லிம்கள் மீது தாக்குதல்!!

அம்பாறை நகரில் இன்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. நேற்று (26) நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள் ஹோட்டல் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

மானிப்பாயில் வாழ்வெட்டுக்குழுவின் முக்கிய உறுப்பினர் கைது!

வாழ்வெட்டுக்குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். இவர் ஆவா குழுவின் தலைவர் சன்னாவின் முக்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை மானிப்பாய் பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பல்வேறு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

புளொட் முன்னாள் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்து காணாமற்போனவையாம்

‘புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை எனவும் அவை காணாமற்போயிருந்தன எனவும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது’ என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில்...

அனந்தி சசி­த­ரன் மற்றும் சிவ­க­ரன் கட்­சி­யிலிருந்து நீக்கப்படுகின்றனர்?

இலங்கைத் தமிழர­சுக் கட்­சி­யில் இருந்து வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் கட்சியின் இளை­ஞர் அணி­யின் முன்னாள் செய­லர் சிவ­க­ரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டுமென கட்­சி­யின் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர­சுக் கட்­சி­யின் செயற்­கு­ழுக் கூட்­டம் கொழும்­பில் நடை­பெற்­றபோது திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன்...

இரண்டாவது முறையாக யாழிற்கு வந்த நிலக்கரி ரயில்!

யாழ்பாணத்திற்கு இரண்டாவது முறையாக நேற்று (திங்கட்கிழமை) நிலக்கரி ரயில், வந்துள்ளது. காலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து. யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த குறித்த ரயிலில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில் அங்கு குறித்த ரயில் செல்லாதெனவும் இன்று காலை 10 மணிக்கு...

மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று!

மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, மாற்றங்களுடனான புதிய அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில்...

“தேர்தல் பின்னடைவிற்கு சுமந்திரனே காரணம்” : தமிழரசுக் கூட்டத்தில் சலசலப்பு!!

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம் என நேற்றுமுன்தினம் நடந்த தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்படப் பலர் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர் எனக்...

தூக்கில் தொங்கிய இளைஞனின் காதலி கிணற்றில் குதித்து தற்கொலை!!!

வவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த விடுதியில் நேற்று முன்தினம் மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார்....

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை?

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு மாவட்டமாகும். தற்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், மாவட்ட செயலக வளாகத்திலும் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று...

ஆனல்ட்டுக்குத்தான் ஆதரவில்லை, கூட்டமைப்பிற்கு ஆதரவுண்டு- ஈ.பி.டி.பி

யாழ் மாநகரசபையின் முதல்வராக ஆனல்ட் பரிந்துரைக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடுவதில்லையென ஈ.பி.டி.பி முடிவெடுத்துள்ளது. சொலமன் சிறில் முதல்வராக அறிவிக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பை ஆதரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வராக ஆனல்டை நியமிக்க சுமந்திரன் பகிரங்க பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள் கணிசமான விமர்சனங்கள் எழுந்துள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், ஆனல்டை முதல்வராக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக...

நிலவும் அதிக வரட்சி காரணமாக கண்களுக்கு பாதிப்பு!!!- வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளியினால் இதுவரை 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளதாக கட்புல மருத்துவநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். அனுராதபுரம், புத்தளம், பொலநறுவை, மன்னார், மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்திலேயே மிகவும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். எனவே கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் கண்ணாடிகளை...

கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும்...

வாள் வெட்டுக்கு இலக்கான யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்...

“காணாமல் போனோர்” சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வு எதிர்வரும் 26ம்திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே, இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக...

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி உனா மக்கோலி திடீர் மரணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிவந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர...
Loading posts...

All posts loaded

No more posts