- Wednesday
- May 20th, 2026
யாழில் இந்து ஆலயம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். ஏழாலை பகுதியில் வசித்துவரும் திருமதி அனுஷா பாலகிருஷ்ணன் எனும் பெண்மணி யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா அனுப்பிவிட்டு தான் மாத்திரம்...
யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கட்டிடத் தொகுதியை திறந்துவைத்தார். மத்திய அரசின் மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபா நிதியில் வடமாகாண சுகாதார அமைச்சினால் இந்த கட்டடம்...
யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுமலை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது அது திடீரென தீப்பற்றியதால் அந்நபர் உயிரிழந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஆறுமுகம், துரைராஜா என்ற 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையெ உயிரிழந்துள்ளார். நீர் இயந்திரத்தை இயக்குவதற்காக மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது பெற்றோல் போத்தலில் தீப்பற்றி...
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)...
தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயர்...
இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லையென சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் இலங்கையில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிராஜ் பட்நாயக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில்...
மஹிந்தவின் மீள் எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
வடபகுதியில் பல்வெறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வவுனியா புளியங்குளம் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “வட...
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால்...
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தில் இறந்தவர்களையும் விட அதிகமானவர்கள் தற்போது வீதி விபத்துகளில் இறக்கின்றார்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) யாழில் இடம்பெற்ற போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் வீதி விபத்துகள் சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், யுத்தகாலத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்காக பயங்கரவாதிகளையும்,...
மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் பதவியை அவருக்கு கொடுக்கவிரும்பினால் கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவோமுடியும். அமைச்சராக இருந்த அவர் செய்யாததை நாங்கள் வெளியில் இருந்து செய்துள்ளோம் . அவரது அமைச்சுப் பதவிகளைக் கண்டு நாங்கள் அச்சம் கொள்ளவில்லை எனதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா...
2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்....
பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டன இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் வாசுதேவ...
மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையே என கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தாங்கள் கடந்த எட்டு வருடமாகக் கூறிவந்த...
கடந்த காலத்தில் பயங்கர குற்றங்களுடன் தொடர்புபட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 150 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச காவல் துறையின் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட...
மன்னார் மாவட்டம் தேசியக் கட்சியொன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தமிழ் தலைமைளும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் முடிவு பற்றிக் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் பிரிதிநிதிகளிடமும் உள்ள ஒற்றுமையீனம் காரணமாகவே...
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார். முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) என்பவரே இன்று (வியாழக்கிழமை) நாடு கடத்தப்பட இருக்கின்றார் என அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார்...
முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில்...
மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள்...
Loading posts...
All posts loaded
No more posts
