Ad Widget

மன்னார் மாவட்டத்தை இழந்தமைக்கு தமிழ் தலைமைகளே பொறுப்பு : விநோ குற்றச்சாட்டு!

மன்னார் மாவட்டம் தேசியக் கட்சியொன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தமிழ் தலைமைளும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் முடிவு பற்றிக் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் பிரிதிநிதிகளிடமும் உள்ள ஒற்றுமையீனம் காரணமாகவே மாவட்டத்தின் அரசியல் இருப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

இது தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தையும் பயணத்தையும் அஸ்தமிக்கும் நிலைக்கு தள்ளிவிடும். எமது மக்கள் சரியான அரசியல் தீர்வினைக் காண்பதில் தடுமாற்றம் அடைகின்றனர்.

மன்னாரில் ஒரு மாகாண அமைச்சரையும் மூன்று மாகாணசபை உறுப்பினர்களையும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் கொண்டிருந்த போதும் ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசியல் தலைமை கைப்பற்றப்பட்டுள்ளமை தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும’ எனத் தெரிவித்தார்.

Related Posts