யாழ். போதனா மருத்­து­வ­ம­னைக்கு பெருன்பாமை இனத்தவர் சிற்­றூ­ழி­யர்­களாக நியமனம்!!

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி திறந்து வைக்­கப்­ப­ட­வுள்ள அவ­சர விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வுக்கு நிய­மிக்­கப்­ப­டும் சிற்­றூ­ழி­யர்­க­ளில் 60 சத­வீ­த­மா­னோர் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அவ­சர விபத்­துப் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 7ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலை­யில், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ரும்­போது அத­னைத் திறப்­ப­தற்கு...

முல்லைத்தீவு போராட்ட களத்திற்கு வந்த சர்வதேச பல்கலைக்கழக மாணவர்கள்!

நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதந்த இனத்துவக் கற்களுக்கான சர்வதேச நிலையத்தினைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் கேப்பாபிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற...
Ad Widget

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் சாவு!

சாவகச்சேரியில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தொடருந்துடன் மோதி படுகாயமடைந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிள் மோதுண்ட இந்தச் சம்பவம் நேற்று...

சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக சீடி ஒன்றை சமர்ப்பிகக பொலிஸார் முயற்சி!!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கில் புதிய சான்றுப்பொருளாக இறுவெட்டு (சீடி) ஒன்றை இணைக்க பொலிஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நிராகரித்தார். “வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட பின்னர்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தமது செய்தி வெளியீடு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் அதன்...

ரெலோவிடமிருந்து 20 சிங்களப் பொலிஸாரைக் காப்பாற்றிய தமிழ் பொலிஸ் அலுவலகர் மறைவு!

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் காப்பாற்றியவர் என்று பாராட்டப்பட்ட தமிழ் பொலிஸ் அலுவலகர் பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை நேற்றுக் காலமானார். இயற்கை எய்தும் போது அவருக்கு வயது 82. அவரது பூதவுடலுக்கு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று அஞ்சலி செலுத்தினார். பருத்தித்துறை நகரில்...

நீதித்துறையில் அரிதான தீர்ப்பளித்தார் யாழ். நீதிவான் ஏ.எஸ்.பி. போல்!

குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களை கவனத்தில் எடுத்து இயற்கை நீதியின் பிரகாரம் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கைதிக்கு தண்டனைத் தணிப்பு வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த கைதி ஒருவருக்கு அதனை இயற்கை நீதியின் பிரகாரம் அதே நீதிமன்று தண்டனைத்...

யாழ்.நாவாந்துறையில் போராட்டம்!! : தப்பியோடியவர் மீண்டும் யாழ் வைத்தியசாலையில்?

யாழ்.நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முற்பட்டவர் என சந்தேகித்து தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை காவற்துறையினர் கைது செய்யாதமையை கண்டித்து நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி...

சிங்களமயமாகும் வவுனியா; மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள் – தவராசா குற்றச்சாட்டு!

வவுனியாவிலுள்ள பல கிராமங்கள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், எனினும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....

சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை!!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள்...

கிளிநொச்சியில் போதைப்பொருளிற்கு அடிமையாகும் மாணவர்கள்: உளநல மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு!

யாழில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்....

போதைப்பொருள் வியாபாரத்தின் மையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது – சுரேஸ் பிரேமசந்திரன்

போதைப்பொருள் வியாபாரத்தின் மையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தியாவிலிருந்தே போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும், அதனை தடுக்க கடற்படையினரும், பொலிஸாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்...

விக்கி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. விக்னேஸ்வரன், மாகாண முன்னாள் அமைச்சர்கள் கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு...

முஸ்லிம் காங்கிரஸின் யாழ். முக்கியஸ்தர் கஞ்சாவுடன் சிக்கினார்!

யாழ்ப்பாணம் நகரில் வர்த்தகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ரோசான் தமீம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக தயார்படுத்தி வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகரில் முக்கிய புள்ளி ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் கொடி கட்டிப்பறக்கிறார் என்று தகவல் அறிந்து கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு...

கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது தாக்குதல் : ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

போதைப்பொருள் பாவனை தொடர்பாக தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 9 மணிக்கு டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ள கண்டனப் பேரணி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை சென்றடையவுள்ளது....

சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்: மக்கள் விசனம்!

சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார். தப்பிச் சென்றுள்ளவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு...

வடக்கிற்கு 800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: மனோ கணேசன்

வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கு 800 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமராட்சி, தென்மேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருட இறுதியில் அமைச்சரவை மாற்றத்தின்போது ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்த சமூக மேம்பாட்டுத்துறை...

வட.மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாதமொன்றுக்கு வழங்கிய கொடுப்பனவு என்ன ? முழு விபரம் இதோ!

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவைத் தலைவர், பிரதி அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்காக மாதமொன்றிற்கு சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் 34 இலட்சத்து 898 ரூபாய் மாதமொன்றுக்கு செலவிடப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக வடக்கு மாகாண பேரவை செயலகத்திடமிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது. எனினும் முதலமைச்சர் உள்ளடங்களாக...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை: ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை போன்று, போதைப்பொருள் வியாபாரமும் விரைவில் ஒழிக்கப்படும். அதற்கான பொறுப்பு முப்படையினருக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts