Ad Widget

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை: ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகுவிரைவில் மரணதண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை போன்று, போதைப்பொருள் வியாபாரமும் விரைவில் ஒழிக்கப்படும். அதற்கான பொறுப்பு முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரிகள் உலக அரசியலை வீணடிக்கின்றனர். ஆகவே இந்த போதைப்பொருள் வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். பிலிபைன்ஸ் ஒரு காலத்தில் போதைப்பொருட்களால் மலிந்து காணப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று அந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்பாட்டை முன்னெடுத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மரணதண்டனை வழங்கப்படுகின்றது.

அதேபோல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகு விரைவில் மரணதண்டனை விதிக்கப்படும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts