- Monday
- August 31st, 2026
"வடக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி" என்ற தலைப்பில் ஆளுனரின் வட்டமேசை மாநாடு யாழ் பொது நுாலகத்தில் இன்று(4) இடம்பெற்றது வடக்கு மாகாண மத்தியவங்கி முகாமையாளர் சிவதீபன் , சிரேஸ்ர விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் , ஆளுனர் சுரேன் இராகவன் , மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி திரு. செல்வின் ஆகியோர் உட்பட பலதரப்பினர் பங்கேற்றிருந்தனர்...
கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது....
போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, 1) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். 2) மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல். 3) தொடருந்து வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல். 4) செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்....
வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு...
யுத்த காலத்தின்போது மன்னாரில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களில் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்று சந்தேகம் வெளியிட்ட காணாமலாக்கப்பட்டோரின் மன்னார் மாவட்ட சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா, இதன் காரணமாகவே முகாம்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம்...
மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வடக்கில் இருக்குமாக இருந்தால், தமிழர்களது காணிகளுக்கு பாரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கிற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தேவையற்ற ஒன்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார். யாழில், நேற்று (வெள்ளிக்கிழமை)...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட சிறுவன் உள்ளடங்கலாக 26 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய...
நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....
2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு...
வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வரட்சிப் பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிதித் தொகை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும...
யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்து மீது கொடிகாமம் பகுதியில் இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர். கொடிகாமம் சந்திக்கு அருகிலுள்ள கைகாட்டிச் சந்திக்கு அருகில் வைத்து, மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சுத் தாக்குதலில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அதே மின் கம்பம் அவர் மேல் விழுத்ததில் குறித்த ஊழியர் உயிரிழந்த பரிதாப சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியிலநேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம்...
காரைநகர் பிரதேச உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று வலந்தலை சந்தியில் இடம்பெற்றது. காரைநகர் பிரதேச சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர் நல்லையா ஜெயகிஸ்ணா, சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிப்பத்திரமின்றி மாடு ஒன்றைக் கொண்டு சென்ற ஒருவரைத் தாக்க முற்பட்டவர்களைத் தடுத்துள்ளார். மாட்டைக் கொண்டு சென்றவரைத் தாக்கவேண்டாம் என்றும் அவரைப் பொலிஸில்...
தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் அறிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய, நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பானது நேற்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கமைய உள்ளூர் சம்பா அரிசி -84...
வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர்...
விசுவமடுவில் சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் ரத்னபிரிய பந்து இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (வியாழக்கிழமை) வழங்கிவைத்தார். தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏ.ஏ.எம்.பதிஹூ, லெப்.கேணல் ரத்னபிரிய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர்...
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்த உப பொலிஸ்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றம் குறித்த சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது, “இலங்கை தொடர்பான விடயம் ஜெனிவாவில் பேசப்படும்போது, இந்தியா...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீது நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு...
Loading posts...
All posts loaded
No more posts
