Ad Widget

கிளிநொச்சி உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத்தண்டணை!!

கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது.

ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உணவகத்தை மூடி சுத்தம் செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதமன்றம் கட்டளையிட்டது,

உணவகம் சுத்தம் செய்யப்பட்ட நிலையிலான அறிக்கை மன்றிர் சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட உணவக உரிமையாளருக்கு 5 வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு,

உணவகத்தில் இவ்வாறான நிலமை மீண்டும் கானப்பட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Posts