தமிழர்களை கைது செய்தபோது பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறில்லை… இப்போதுதான் தவறுகள் தெரிகிறதா?: கோட்டை நீதவான் கேள்வி!

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டமைந்துள்ளது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது ஒரு தரப்பினர் கைது செய்யப்படும் போது மாத்திரம் அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றன என...

தமிழ் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தால் வறிய நிலையில் உள்ள இரண்டு தமிழ் குடும்பத்திற்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த வீடுகள் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் ஆலோசனை வழிகாட்டலில் இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. குருநாகலைச் சேர்ந்த சந்தன அழககோன் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஆகியோரின்...
Ad Widget

யாழ் பல்கலைகழக மாணவிகள் மீது பாலியல் சீண்டல்; உடன் தீர்வில்லையேல் நடவடிக்கை எடுப்போம்!!: ரெலோ எச்சரிக்கை

யாழ் பல்கலைகழகத்தில் பகிடிவதையென்ற பெயரில் வக்கிரங்கள் அரங்கேறுவது தொடர்ந்து நடந்து வந்தாலும், தமிழ்த்தேசியத்துக்கு பக்கபலமாக யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் செயற்பட்டு வரும் பின்னணியில் பல்கலைக்கழக மட்டத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு காணப்படுமென நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் அது தொடர்ந்து கொண்டிருப்பதால், பல்கலைகழகம் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், இதற்கு நிரந்தர...

யாழ் பல்கலைக்கழக விரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கம்

அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி புதன்கிழமை (இன்று) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயமொன்றை. மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தின்...

காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்!!

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அது தொடர்பில் மனைவி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...

பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை!!

பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக ​வெளியிட்டுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால்...

சந்திரிக்கா மற்றும் தூதுவர் குழுவினருடன் யாழ்.பல்கலை மாணவர்கள் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் தூதுவர் குழுவினருடன் யாழ்.பல்கலை மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌவுசி, சுவிட்ஸர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள், பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் ஆகியோரும் இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ...

விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி உள்ளது!!

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் தகுதியும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா...

நாடு முன்னேற நல்லிணக்கம் அவசியம் – சந்திரிகா

நாட்டை முன்னேற்றமான பாதையில் கொண்டுசெல்ல நல்லிணக்கம் அவசியமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தோடு சமய ஒருமைப்பாட்டு நிகழ்வுகளின் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சமாதான புத்தாண்டு உதயம் – தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

இனிமேல் மின்சார தடை இல்லை!

நாட்டில் கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுவரும் நாளாந்த மின்சார தடை நாளை முதல் அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை (வியாழக்கிழமை) முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

எந்த தடை வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன் – கௌரவ ஆளுநர்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கௌரவ ஆளுநர்...

கை குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பயன்பாடற்ற காணி ஒன்றிலிருந்தே...

தவராசா அவர்கள் தெரிவித்த கருத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி பதில்

முன்னைய வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்கள் அண்மைய உச்ச நீதிமன்றத் தீர்மானத்தை முன்வைத்து வருங்காலத்தில் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றார். முன்னரும் அவரின் தேவையற்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்திருக்கின்றோம். இப்பொழுது அவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து மீண்டும் பழைய பல்லவியைப் பாட முயன்றுள்ளார். குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு சூழல் மற்றும் இயற்கையியல்...

நகுலேஸ்வரத்தை புனிதபூமியாக்க ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கப்படும்

நல்லை ஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள...

யாழில் போராட்டத்தின் பின் வீடு திரும்பியவர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக இந்து சமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியானது!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அவர்களுக்கான சம்பளம் இன்று (செவ்வாய்கிழமை) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் இன்றைய...

யாழ். நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து பின் வாயிலூடாக தப்பித்து ஓடியுள்ளார். யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந்த என்ற சந்தேகநபரே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ்...

யாழில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா வாமதேவன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த உப்பு...

இரணைமடு விசாரணை குழுவின் இறுதி அறிக்கை – ஆளுநரின் உத்தரவு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட இடருக்கு இரணைமடுக் குளத்தின் பராமரிப்பு முகாமைத்துவத்தின் தவறு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை உடன் நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரால் மாகாண பிரதம செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொறியியலாளர் ரகுநாதன்...

மீண்டும் பணிப்புறக்கணிப்பு – நாட்டு மக்களுக்கு நெருக்கடி!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக சில ரயில் மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts