Ad Widget

யாழில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா வாமதேவன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது. சுமார் 100 ஏக்கர் காணியில் 100 மில்லியன் ரூபாய் முதலீட்டில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருட யுத்தத்தின் போது வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட தொழிற்சாலைகள் அழிவடைந்தன. இதனால் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்கள்.

இந்நிலையில் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாய் நிதி முதலீடு செய்யப்பட்டு உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி செய்வதற்கான பாத்திகள் அமைக்கப்பட்டு, அங்கு 100க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

உப்பு உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கு மத்திய சுற்றாடல் சபையின் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதுடன், சுற்றுச் சூழல் மாசடையாத வகையிலும் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts