- Monday
- August 31st, 2026
அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், நோயாளர்களுடன் குறைந்தபட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நோயாளர்களுடன் நேரத்தை செலவிடுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட கருவி ஒன்றும்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம் திகதி பாரிய நடைபயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளில் நீதி கிடைக்க வேண்டும், இலங்கை...
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை பதினையாயிரம் ரூபாயினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலாளர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக...
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதிக் கூட்டம் இம்மாதம்...
யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் கே.சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன்...
மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துககு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது. வரணி இயற்றாளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் மாணவன் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு இலக்காகி...
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. 18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை...
வடக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
திருகோணமலையில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்திய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் வாவியில்,...
இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்கள் நேற்று (சனிக்கிழமை) இரவு 9.04 மணியளவில் இந்து சமுத்திரத்தின் மொஹென் பகுதியை அண்மித்த இடங்களில் பதிவாகியுள்ளன. 5.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் குறித்து இதுவரை வேறு எந்தவிதமான...
மாதகல் பகுதியில் காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கஞ்சா போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற போதிலும் , தம்மால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறை தரப்பு அடியோடு மறுத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளவாலை காவல்துறைப்...
ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை குறித்து நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அவமானப்படப்போகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது பலவீனத்தை அறிந்து எப்படியேனும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் ஆட்சி எல்லைக்காலம் குறித்தும், ஜனாதிபதித் தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்புகள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துயாடலும் இடம்பெற்றது. இதில் முக்கியமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அத்துடன் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கவுள்ள பங்களாவை பெற்றுக்கொள்ளக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் அடியோடு நிராகரித்தார். எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்ட பினனர், எதிர்க்கட்சி தலைவருக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றிருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலமும் அடங்கும். எனினும், மஹிந்த...
யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு கிழக்கு அம்மன் கோயிலுக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடப்படையினர், அப்பகுதியிலுள்ள சுமார்...
தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்கள கும்பலால் குருநாகல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பதற்றம் நிலவியது. தமிழ் சிங்கள புத்தாண்டு காரணமாக நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட தொடருந்தில் இடநெருக்கடி காணப்பட்டது. ஆசனங்களை பிடிப்பதற்காக மக்கள் முண்டியடித்தனர். ஆசனமொன்றை பிடிப்பது தொடர்பில் தமிழ், சிங்கள இளைஞர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக...
யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு...
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் இடம்பெற்றது என பொலிஸார் கூறினர். மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
