Ad Widget

அரசாங்கம் வழங்கும் பங்களா!! உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்தார் சம்பந்தன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கவுள்ள பங்களாவை பெற்றுக்கொள்ளக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் அடியோடு நிராகரித்தார்.

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்ட பினனர், எதிர்க்கட்சி தலைவருக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றிருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலமும் அடங்கும். எனினும், மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவரான பின்னர், அவர் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலத்தை பெற்றுக்கொள்ளவில்லை. வயதில் மூத்த இரா.சம்பந்தனே அந்த வீட்டில் இருக்கட்டுமென கூறியிருந்தார்.

இரா.சம்பந்தன் ஏற்கனவே சமிற் பிளட்ஸில் குடியிருக்கிறார். அவரது வீடு மேல்தளத்தில் உள்ளது. வயோதிகத்தில் படியேற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இரா.சம்பந்தன் முன்னர் குடியிருந்த வீட்டையே விசேட அமைச்சரவை பத்திரமொன்றின் வழியாக அந்த வீட்டை மீள அவருக்கே வழங்க முடிவாகியுள்ளது. இந்த செய்தி வெளியாகி பின்னர், “சொகுசு பங்களாவை பெறுகிறார்“ என்ற விமர்சனங்கள் தமிழ் பரப்பில் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், வரவு செலவு திட்ட வாக்களிப்பிற்கு முன்னதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, சில எம்.பிக்கள், அரசாங்கம் தரும் பங்களாவை பெறக்கூடாது என தெரிவித்தனர். சமூக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் அது எதிமாறான விமர்சனங்களை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டனர்.

எனினும், அந்த கருத்தை சம்பந்தன் நிராகரித்தார். மக்களிடம் அப்படியான விமர்சனங்கள் எதுவும் கிடையாது, இது உங்களின் பிரச்சனை என சம்பந்தர் காரசாரமாக குறிப்பிட்டார்.

தனது சமிற் பிளாட்சில் 76 படியேறி வீட்டிற்கு செல்லவுள்ளதாகவும், அதனால் அரசாங்கம் தரும் வீட்டை பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

Related Posts