யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பம் யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நவிண்டில் – கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பகுதியில் அடுத்தடுத்து தனக்குத்தானே தீ வைத்துக்கொள்ளும் சம்பவம் இடம்பெறுவது கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.