மக்களே எச்சரிக்கை ! நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்!!

நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை முதல் 5 ஆம் திகதி முதல் இம்மாதம் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேர உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலம் தெரிவித்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வேளைகளில், அதிகூடிய வெப்ப நிலை...

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: 500 குடும்பங்களுக்கு ரூபா 2 கோடி இழப்பீடு!! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமாக அமைந்த நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. சுன்னாகம் மின் வழங்கல் நிலையதமை அண்டிய பகுதிகளில் நீர் மாசடைந்துள்ளதாக அறிவித்த உயர் நீதிமன்றம் இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. சூழல் மற்றும் இயற்கை...
Ad Widget

முன்னாள் போராளிகள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு எடுத்துரைப்பு!

அமெரிக்காவின் அரசுதுறைக்கான மனித உரிமை அலுவலர் கிறிஷ்டினா ஜேம்ஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் முதன்மைச்செயலர் சீன்ரூத்தே ஆகியோருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. யுத்தத்திற்கு பின்னரான ஜனநாயக அரசியலில் முன்னாள் போராளிகளது வகிபாகம் மற்றும் அவர்கள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், சமகாலத்தில்...

நாட்டின் 20 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை!

நாட்டின் 20 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அநுராதபுரம்,...

பலாலியில் இருந்து 72 ஆசனங்களையுடைய விமான சேவையை உடன் ஆரம்பிக்க முடியும்!!

பலாலியில் இருந்து 72 ஆசனங்களையுடைய விமான சேவையை உடன் ஆரம்பிக்க முடியும் . இருப்பினும் அதற்கான அலுவலக வசதிகளை உடனடியாக ஏற்படுத்தியதும் விமான சேவையை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என இலங்கை சிவில் விமான சேவைப் பணிப்பாளர் தெரிவித்தார். வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் 6வது கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில்...

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு

கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த்த் துயரச் சம்பவம் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக வீரரான இராசேந்திரம் நிதர்சன் (வயது -25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (02) மாலை கரப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிதர்சன் சோர்வாகவுள்ளதாகத்...

கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத்...

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்!

பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் குறித்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அதிகரித்து வரும் மின் சக்திக்கான தேவைகளுக்கான...

மானிப்பாயில் பெண்களுடன் சேட்டை புரிந்த மாணவர்களைத் தண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்!!

வீதியில் பெண்கள் மீது சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்களை அழைத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தண்டித்திருந்த நிலையில் மறுநாள் பாடசாலைக்குள் நுளைந்த மாணவன் ஒருவரின் தந்தை பெரும் குரல் எழுப்பி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிபரை மன்னிப்புக் கோரவைத்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் தறுதலைகளாக மாறுவதற்கு பெற்றோரின் இவ்வாறான செயற்பாடுகளே காரணம் என...

ஆவா குழுவை அடக்கிய யாழ்ப்பாண பொலிஸாருக்கு கௌரவிப்பு!

யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் வவுனியா பகுதிகளில் மறைந்திருந்த ஆவா குழுவின் உறுப்பினா்கள் என பொலிஸாரே கூறும் இக்ரம் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த பொலிஸ் உத்தியோத்தா்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 6...

பதின்ம வய­துச் சிறுமிமையை பாலி­யல் வன்­கொ­டு­மை செய்த இருவர் கைது!

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் பதின்மவயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இரு இளைஞா்களை முள்ளியவளை பொலிஸாா் கைது செய்துள்ளனா். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, பதின்ம வய­துச் சிறுமி ஒரு­வர் வீதி­யால் நடந்து சென்று கொண்­டி­ருந்­த­போது, இரண்டு இளை­ஞர்­கள் சிறு­மி­மையை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­னர். சிறுமி நடந்த சம்­ப­வத்தை உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். உற­வி­னர்­க­ளால்...

வெளியூர் வர்த்தகர்களின் வியாபாரங்களுக்கு தடை விதிக்கக் கோருகிறது யாழ்.வணிகர் கழகம்!!!

பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாண மாநகர் உள்பட வடக்கு மாகாணத்தில் அனுமதி வழங்க வேண்டாம் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர். ஜெயசேகரம், உள்ளூராட்சி சபைகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். தென்னிலங்கை வர்த்தகர்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதே போன்று வடபகுதி வர்த்தகர்கள் தென்னிலங்கையில் சென்று...

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்

வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி...

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது!

019ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 22ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியிடம் கொழும்பு தமிழ் சங்கம் மன்னிப்பு கோரியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தவிருந்த தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்கு சங்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனையடுத்து தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவின் சட்டரீதியற்ற செயற்பாட்டினால் தந்தை செல்வாவின் நினைவுக் கூட்டம் இரத்தானது என கொழும்புத் தமிழ்ச் சங்கம், தமிழரசுக் கட்சியின் கொழும்புக்...

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன

மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மனித புதைகுழியானது சிறிய அளவில் அகலப்படுத்தப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோம தேவவினால் மன்னார் மனித புதைகுழி...

பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடக்கைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் புத்தளத்தில் கைது!!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்லவிருந்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸார் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை:ஆளுநர் சுரேன் ராகவன்

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் இருக்கின்றதென வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லெவருடுக்கு (Eric LAVERTU) குறிப்பிட்டுள்ளார். ஆகையால், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் ஆளுநர் மேலும்...

யாழின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ராஜித ஸ்ரீ தமிந்த, தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர், தமது கடமைகளை...
Loading posts...

All posts loaded

No more posts