15ஆம் திகதி விடுமுறை – அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 15ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள மற்றும் இந்து மக்களால் சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டே 15ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் கொலை செய்த நபர் கைது!!!

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது இதில் கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே உயிரிழந்துள்ளார் விநாயகபுரம் ஒன்பதாம் குறிச்சி வீதியில் மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை...
Ad Widget

ஆனைக்கோட்டையில் உதயமானது அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம்!

சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப் பலகை திரைநீக்கம்...

யாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களின் கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் வரவு மற்றும் மீள்செல்கை கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் மூன்று கழிவு ஒயில் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபன், கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று (01) பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கைவிரல் ரேகை இயந்திரங்களே இனந்தெரியாத...

வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போரட்டம்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் நாளை (3/4/2019) புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டதினை மேற் கொள்ளஉள்ளனர் . எனவே அன்றைய தினம் வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் ப ட்டுள்ளது ..

உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வுகூறல்!

நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு...

சுதாகரின் பிள்ளைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி தவறியுள்ளார்

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாடியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடியாது: தலதா அத்துகோரள

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையில் எந்ததொரு தலையீட்டினையும் தற்போதைய நிலைமையில் மேற்கொள்ள முடியாதென அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரத்தில்...

கலப்புப் பொறிமுறை குறித்த விவாதம் கலப்புப் பொறிமுறைக்குள்ளேயே எம்மைச் சிக்க வைத்துவிடும் – மணிவண்ணன் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்திருக்கின்ற கலப்புப் பொறிமுறை தொடர்பான விவாதம் சர்வதேச விசாரணை பற்றி பேசாது கலப்புப் பொறிமுறைக்குள்ளேயே தமிழ் மக்களைச் சிக்கவைக்கும் தந்திரோபாயமாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் சர்வதேச விசாரணை எனும் நிலைப்பாட்டிலிருந்து எவர் மாறினாலும் அவர்கள் தொடர்பில் மக்களிடம் புரிதலை ஏற்படுத்தவேண்டிய...

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த...

பிரமிட் வர்த்தக முறைமை: யாழில் திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை!

மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது....

வட மாகாணத்தில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்பு!! – ஆய்வில் தகவல்

வட மாகாணத்தில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண நீர்பாசன திணைக்களம் மற்றும் பிராந்திய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முன்னெடுத்திருந்த ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர்...

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது...

சிறுவன் மீது கொலை முயற்சி!!

சிறுவன் ஒருவனை மயக்கமடையவைத்து அவனை கொலை செய்ய இனந்தெரியாதவர்கள் முயற்சித்ததாக அவனது பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 6:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் தெய்வாதீனமாக சிறுவன் தப்பித்துள்ளான். சிறுவனது குடும்பம் கட்டைக்காடு தேவாலயத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்று வழிபாடுகள் நிறைவு செய்துவிட்டு...

பிரதமர் – ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் -த.தே.கூ

வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு நாளைய தினம் பிரதமருடனும் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் எமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும்...

கீரிமலையில் வாளுடன் நடமாடிய இளைஞர் கைது!

கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞரொருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயதுடைய இளைஞனையே பொலிஸார் கைது செய்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், இளைஞரொருவர் வாளுடன் நடமாடுவதாக அப்பகுதி மக்கள், காங்கேசன்துறை பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...

அரசுக்கு எதிராக கூட்டமைப்பை வாக்களிக்குமாறு அருந்தவபாலன் சவால்!

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக முடிந்தால் கூட்டமைப்பை செயற்படுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் சபையில்...

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை காட்டவே இந்தியா உதாரணம் – விக்கி

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில் மனித உரிமைகள் சபையில் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்...

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடிவு – ஜனாதிபதி

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி குறிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மோதர பகுதியில் சர்வ மத தலைவர்களுடனநேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு...

பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் தற்கொலை முயற்சி!!!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்தனர் – அடாவடியில் ஈடுபட்டனர்...
Loading posts...

All posts loaded

No more posts