Ad Widget

முன்னாள் போராளிகள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு எடுத்துரைப்பு!

அமெரிக்காவின் அரசுதுறைக்கான மனித உரிமை அலுவலர் கிறிஷ்டினா ஜேம்ஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் முதன்மைச்செயலர் சீன்ரூத்தே ஆகியோருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

யுத்தத்திற்கு பின்னரான ஜனநாயக அரசியலில் முன்னாள் போராளிகளது வகிபாகம் மற்றும் அவர்கள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், சமகாலத்தில் போராளிகள் மீதான பாதுகாப்பு தரப்பினரது கெடுபிடிகள் மற்றும் அண்மை காலமாக தமிழர் தாயகத்தில் நடைபெற்று வருகின்ற நீலமீட்பு போராட்டங்கள், காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்பு கூறலில் அரசின் காத்திரமற்ற செயற்பாடு தொடர்பாகவும் கலந்துரையிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தமிழர்களின் நலன்சார் விடயங்களில் அமெரிக்கா காத்திரமாக இணைந்து பணியாற்றுமென உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts