Ad Widget

மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுகின்றன – சுரேஸ்

மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வடக்கில் இருக்குமாக இருந்தால், தமிழர்களது காணிகளுக்கு பாரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கிற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தேவையற்ற ஒன்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் வயல் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் வாழும் கொக்குலாய், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களையும் மகாவளி அமைச்சு அபகரிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு அதற்கு எதிராக தமிழ் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில் மகாவளி அபிவிருத்தி திட்டம் மோசமான எதையும் செய்யவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது, தமிழ் மக்களை ஏமாற்றும் செயலென்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts