- Monday
- April 27th, 2026
பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று யாழ்ப்பாணம்...
யாழ். மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள்...
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படகின்றது. குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமைபோல நடமாடி வருவதை...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி நோயுடன் (Multi system inflammatory syndrome) தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே...
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அவ்வாறு வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உலகில் வேறு எந்தப் பொறிமுறையும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த விடயம் குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அவர், சோதனைக்காக...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை...
அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (வியாழக்கிழமை) முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணய விலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...
அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரச செலவுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். தடுப்பூசி, சுகாதாரத் துறையில் கூடுதல் செலவுகள் மற்றும் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தொடர்ச்சியான செலவு மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம் என்று அமைச்சர் அமைச்சரவைக்கு...
சர்வதேச விசாரணைகள் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகள் ஊடாக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெறுவதற்கு அனைவரும் முனைப்பு காட்ட வேண்டுமென சிவாஜிலிங்கம்...
காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை), அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு கூறியுள்ளார். காணாமற்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் முக்கிய பணி, அவர்கள் எப்படி காணாமல் போனவர்கள் என்பதை கண்டறிவதே. அதுதான் சட்டம்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளிலும் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை,...
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், தற்போதைய கொரோனா இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை...
அரசாங்கம் தினசரி வெளியிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று ஊடக சந்திப்பின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன, இலங்கையின் தினசரி கொரோனா வைரஸ் மரணங்கள், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முப்பது மடங்கு அதிகம்...
குருநகர் இளைஞன் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்....
பொதுமக்கள் தங்கள் சொந்த கிராம அலுவலகர் பிரிவு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இருந்து மட்டுமே கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பல தடுப்பூசி மையங்களில்...
நாட்டில் 30-40வீதமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. முடிந்தளவு பொதுமக்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவதே இப்போது இருக்கும் ஒரே வழிமுறையாகும். ஆகவே குறைந்தது 21 நாட்களேனும் அவர்களைவீடுகளில் தனிமைப்படுத்தியத்தினால் நிலைமைகளை வெகுவாக குறைக்க முடியும் எனபொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69 வயது) பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த (76 வயது) ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மந்திகை ஆதார...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள், கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த முதலாவது அலகு...
யாழ். மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம்,...
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. 103 ஆண்களும் 109 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகத்...
Loading posts...
All posts loaded
No more posts
