Ad Widget

30 தொடக்கம் 40 வீதமான கொவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் 30-40வீதமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. முடிந்தளவு பொதுமக்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவதே இப்போது இருக்கும் ஒரே வழிமுறையாகும்.

ஆகவே குறைந்தது 21 நாட்களேனும் அவர்களைவீடுகளில் தனிமைப்படுத்தியத்தினால் நிலைமைகளை வெகுவாக குறைக்க முடியும் எனபொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகள், முடக்க நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

Related Posts