அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை (வியாழக்கிழமை) முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணய விலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							