Ad Widget

யாழில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அலகை வழங்கும் பணி முன்னெடுப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள், கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த முதலாவது அலகு தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது அலகு தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்படுகிறது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழான ஜே / 111, ஜே / 112, ஜே / 114 மற்றும் ஜே /122 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

Related Posts