நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்!!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது. இதன் காரணமாக நாடு...

தவறான சிகிச்சை முறையினால் 15வயது மாணவன் உயிரிழப்பு??

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 15 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடோன்றில் நேற்று உயிரிழந்தார்....
Ad Widget

செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், நான்கு வாக்குகள் செல்லா வாக்குகளாக அளிக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படாது என அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை...

“எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ – பகிரங்க சவால் விடுத்தார் சுமந்திரன்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

புதிய ஜனாதிபதி தெரிவு இன்று! நாடாளுமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14...

இலங்கை வழமை நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் எடுக்கும்??

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை எனவும், அடுத்தாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். CNN செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார். நாட்டின்...

மேலும் 7 பேர் அகதிகளாக தழிமகத்தில் தஞ்சமடைந்தனர்!

நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் பேர் இன்று (19) காலை தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்தனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 116 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்நிலையில் யாழ்பாணம் மாவட்டம் நாவர்குழியை சேர்ந்த மேரி அகஷ்டா (44) அவரது இரண்டு குழந்தைகள் மேலும் திரிகோணமலை மாவட்டம்...

ஆவா மீது வாள்வெட்டுத் தாக்குதல் – 10 பேர் கொண்ட கும்பல் நடு வீதியில் வைத்து நடத்தியது

ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக...

எரிபொருள் அட்டையை பெற்றவர்களுக்கான அறிவிப்பு!!

தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி SMS அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள...

தொலைபேசியில் சம்பந்தனை அழைத்த ரணில்! வீடு தேடிச் சென்ற சஜித்!!

இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை...

உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினி சாவிற்கு முகம் கொடுக்க நேரிடும் – பதில் ஜனாதிபதி ரணில்

உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினி சாவிற்கு முகம் கொடுக்க நேரிடும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“மேற்குலக நாடுகளின்...

பதில் ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு!

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ‘இந்த நாட்டை’ மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மே 13ஆம் திகதி பிரதமராகப்...

மேலும் ஒரு தொகை சமையால் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!

மற்றுமொரு தொகை சமையல் எரிவாயு நேற்று இரவு நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 3 ஆயிரத்து 309 மெட்ரிக் டொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி இன்று பிற்பகல் முதல் எரிவாயுவை...

இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முக மூடி கொள்ளையன் உட்புகுந்து , வீட்டின் கதவை திறந்து விட மேலும் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டாரை...

எரிபொருள் விலைகள் குறைப்பு!

எரிபொருள் விலையினை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10...

தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, இந்த செயற்பாட்டில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு...

மொபைல் எரிபொருள் விநியோகம் விரைவில் அறிமுகம்- காஞ்சன விஜேசேகர

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளை எரிபொருள் நிரப்புவதற்கான முன்னோடி திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகிகள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . “எரிபொருள் நிலையங்களிலிருந்து பெரிய திறந்தவெளிகளில் முச்சக்கர வண்டிகள், டெலிவரி பைக்குகள் மற்றும் கேன்களுக்குப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்ததோடு விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகின்றேன்” எனவும்...
Loading posts...

All posts loaded

No more posts