Ad Widget

வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்யும்!- காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

இலங்கையில் அதிக இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதிக அளவில் மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. (more…)

சீன உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். நூலக உசாத்துணைபிரிவு கையளிப்பு

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் கையளித்துள்ளனர். (more…)
Ad Widget

வைத்தீஸ்வரா கல்லூரி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

பிரிட்டனின் தெற்காசிய விவகார அதிகாரியுடனான மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியுடனான யாழ். மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது: மு.சந்திரகுமார்

யாழ். மாவட்டத்தில் நகர்புறக் கல்வி நிலைமையோடு ஒப்பிடுகையில் கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார். (more…)

எஸ் எல் பி சி வழியான பி பி சி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்

பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது. (more…)

இது தேசத்துக்கு மகுடமல்ல, இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு: அரியநேத்திரன்

அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அல்ல, அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட கிளை அங்குரார்ப்பணம்

வடமாகாண ஊடகவியலாளருக்கான பாதுகாப்பு, கண்ணியத்துவம், நலன்பேணல் தொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய தீர்மானத்துடனும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதை அரசு உடன் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)

குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் வாழும் 160 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். (more…)

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர்கள் இருவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் யாழ். மேல் நீதிமன்றினால் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல: ஆனந்த சங்கரி

'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி...

உதயன் செய்தியாளர் கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணம்

உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணமானார்.இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் பலவீனமுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பளையில் நடைபெற்றது. மயூரதன் உதயன் இணையத்தள செய்தியாளராக கடந்த...

சுழிபுரம் இறங்குதுறையை திறந்துவைக்க ஏற்பாடு

சுழிபுரம் இறங்குதுறையை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் திறந்துவைக்கவுள்ளதாக சுழிபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கந்தையா குலசிங்கம் இன்று தெரிவித்தார். (more…)

திருடப்பட்ட சிலைகள் மீட்பு

தாவடி அம்பலவாணர் முருகமூர்த்தி ஆலயத்தில் காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினாலேயே சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளது. (more…)

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் !!! .. டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், (more…)

வடக்கு மாகாணம் என ஒன்று இன்னும் சட்டப்படி இல்லை!-ஆணையாளர்

வடக்கு மாகாணம் என ஒரு மாகாணம் இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக இன்னமும் அங்கீகாரம் பெறாத காரணத்தினால், அதற்கு தேர்தல் நடாத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடாத்துவதற்காக கிழக்கு மாகாணம் மாத்திரமே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது,...

சிகிச்சைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

மருதங்கேணி பிரதேச அரசினர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக் கட்டடத்துக்கு அருகில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். (more…)

சுபியானுக்கு எதிராக யாழில் சுவரொட்டி

யாழ். மாநகரசபை உறுப்பினர் அபூ - சுபியானுக்கு எதிரான சுவரொட்டிகள் யாழ். நாவாந்துறை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். முஸ்லிம் மக்களே இடைத்தரகர்களிடம் ஏமாந்துவீடாதீர்கள்: (more…)

தொழிற் சங்க நடவடிக்கைக்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் அச்சுறுத்தல்

வட மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமையினால் தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. (more…)

மாநகர சபைக்கு சொந்தமான காணியில் உள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்கப்படும்

யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் உள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்குதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts