Ad Widget

ஈபிடிபி, இராணுவத்தினர் இணைந்தே என் வீட்டை தாக்கினர் – ஆனந்தி பரபரப்பு பேட்டி! (காணொளி)

ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் உள்ள ஆனந்தியின் வீடு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.

தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆனந்தி,

ஈபிடிபியினரும் இராணுவத்திரும் தனது வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இதை அறிந்து ஆதரவாளர்களும் நண்பர்களும் அயலவர்களும் விரைந்து வந்ததும் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

விடயம் அறிந்து வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி விட்டில் இருந்து வெளியேற்றி வேறு இடத்திற்கு அனுப்பிய சில நிமிடங்களில் அங்கு மீண்டும் வந்த 40க்கு மேற்பட்ட படையினரும் ஈபிடிபி ஆயுததாரிகளும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு 8க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சில ஆதரவாளர்களுக்கு தலை உடைக்கப்பட்டு, கால் கைகள் முறிந்த நிலையில் இருப்பதாகவும் ஆபத்தான நிலை தொடர்வதாகவும் தெரிவித்த அனந்தி, இந்த தாக்குதலில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பெப்ரல் அமைப்பின் உத்தியோகத்தர் ஒருவரும் இதன்போது காயமடைந்துள்ளார். அவரது தொலைபேசி, சிம் பறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆனந்தி எழிலன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆனந்தி வீட்டுத் தாக்குதலுடன் எமக்கு தொடர்பில்லை – இராணுவம்

கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம் ! தேர்தல் கண்காணிப்பாளரும் தாக்கப்பட்டார்!

Related Posts