யாழ். இராணுவ பாதுகாப்பு வலயத்தில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். (more…)

வவுனியா கல்வாரி திருத்தலத்தில் சிலைகள் சேதம்

வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த 08 சிலைகள் இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்திருத்தலத்தின் பங்குத்தந்தை இன்று வியாழக்கிழமை காலை (24) முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

கொன்சலிற்றா இறக்க முன் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?, விசாரணைக்கு உத்தரவு

குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) இறப்பதற்கு முன்னர் அவர், பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார? என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதவான் நீதிமன்ற பொ.சிவகுமார், (more…)

பொதுமக்கள் குறைகேள் இணையம் ஆரம்பம்

அரச சேவையை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

நிதி சேகரிக்கச் சென்றவர்களால் தொலைபேசி திருட்டு

அச்சுவேலி தென்மூலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் பாடசாலைக்கென நிதி சேகரிப்பதாகக் கூறிச் சென்றவர்கள் சிலரால், வீட்டின் முன் மேசையில் வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, திருடப்பட்டுள்ளது. (more…)

பிரதேச சபைகளின் கீழ் சுகாதாரப் பரிசோதகர்கள்

வடக்கில் 4 பிரதேசசபைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான வெற்றிடங்களை உருவாக்கித் தருவோம் என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களினால் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், (more…)

வடக்கில் குழந்தைகள் விவரம் வலைப்பின்னல் மூலம் பதிவு

வடமாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் உடனுக்குடன் வலைப்பின்னல் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. (more…)

சுன்னாக விபத்தில் இருவர் காயம்!

சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தெல்லிப்பளை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் புதன்கிழமை (23) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக (more…)

திறம்படப் பணியாற்றுவோரை பேரவை உறுப்பினர்களாக்குக, யாழ், பல்கலைக்கழகத்தின் மூன்று தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தற்போதுள்ள பேரவை உறுப்பினர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களாகவும், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களாகவுமே உள்ளனர் எனத் தெரிவித்துள்ள (more…)

உதைபந்தாட்டப் போட்டியில் மோதல், 7 பேர் காயம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஒரே ஊரைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். (more…)

எரிபொருள் நிலைய விவகாரம் : சட்டத்தரணிக்கு 2 ½ இலட்சம் வழங்க அனுமதி

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் (more…)

கலாச்சார ஆடைகள் அணிந்து நல்லூருக்கு வருமாறு கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்துக் கலாச்சார ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆலய தரிசனத்திற்கு வாருங்கள் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இதெரிவித்தார். (more…)

அமலனின் குடும்பத்தினருக்கு யாழ்.மாநகர சபை உதவி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமலனின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் யாழ். மாநகர சபை வீடுகட்டுவதற்கு உதவிகளை வழங்கியுள்ளது. யாழ்.மாநகர சபையின் விசேட கூட்டம் நேற்று நடைபெற்றது. சபைக்கு தெரியப்படுத்தும் முகமாக முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இந்த அறிவிப்பினை சபையில் விடுத்திருந்தார். அவர்...

இராணுவ பேச்சாளரரின் கருத்து உண்மைக்குப் புறம்பானது – ஐங்கரநேசன்

யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம் தேவைக்காக எடுக்கப்படவுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, (more…)

இளைஞர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க யாழ். உறுப்பினர்கள் முடிவு

யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சனிக்கிழமை (26) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27) ஆகிய தினங்களில் மஹரகமவில் நடைபெறவுள்ள 9ஆவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற அமர்வினைப் புறக்கணிக்கவுள்ளதாக (more…)

‘மாநகர சபை முதல்வரும் அவரது கணவரும்’ வார்த்தை நீக்கம்

மாநகர சபையில் ஊழல்கள் இடம்பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதனினால் வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்ட 'இந்த மாநகர சபை முதல்வரும் அவரது கணவரும்' (more…)

கறுப்பு ஜுலை வேண்டாம்

சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம் என்ற கையெழுத்துப் பெறும் நடவடிக்கை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (23) இடம்பெற்று வருகின்றது. (more…)

மத்திய அரசுக்குரிய சரத்துக்களை நீக்குமாறு வட மாகாணசபைக்கு ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை

வட மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட 3 நியதிச் சட்டங்களில், மத்திய அரசுக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை நீக்குமாறு, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை செய்துள்ளார். (more…)

அசையா சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவந்தது. (more…)

திருமலையில் விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்க சீனாவுக்கு அனுமதி?

திரு­கோ­ண­ம­லையில் விமா­னப்­ப­ரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான அனு­ம­தி சீனா­வுக்கு வழங்­கப்­ப­டு­மானால் அது இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­களை மீறு­வதும் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய இரு நாடு­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts