Ad Widget

4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்கள் அழிப்பு

சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குட்பட்ட விளான்பகுதியிலுள்ள ஜுஸ் தொழிற்சாலையொன்றில் சுகாதாரத்துக்கு ஒவ்வாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்களை வியாழக்கிழமை (13) கைப்பற்றியதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி எஸ்.றஜீவ் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி ஜுஸ் உற்பத்தி நிறுவனத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளதாகவும், சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்றவிதத்தில் தொழிற்சாலையை மறுசீரமைத்த பின்னரே திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சுகாதார வைத்தியதிகாரி, மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பி.சிவரூபன், கே.ஜெகானந்தன் ஆகியோர் இணைந்து, சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு கீழுள்ள உணவு கையாளும் நிலையங்கள் கடந்த வியாழக்கிழமை (13) சோதனையிடப்பட்டன.

இதன்போதே மேற்படி, தொழிற்சாலை சோதனையிடப்பட்டதாக சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts