- Monday
- July 7th, 2025

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என...

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். வாக்களிக்கும் உரிமையும் திருகோணமலை மாவட்டத்திலேயே உள்ளது. எனினும் அவர் தனது வாக்குரிமையினை செலுத்தச் செல்லாது கொழும்பிலேயே இருந்துள்ளார். அவர் வாக்களிக்கச் செல்லாதமைக்கு சுகவீனம் காரணம்...

இம்முறை சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வடக்குகிழக்கு மாகாணம் முற்றாக நிராகரித்து மைத்திரியை தெரிவுசெய்துள்ளது நாடுமுழுவதும் அறவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி மைத்திரி அவர்களே முன்னணியில் இருக்கின்றார்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி...

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது

யாழ். மாவட்டம் தேர்தல் தொகுதிகளுக்கான சில முடிவுகள் பருத்தித்துறை மைத்திரி 17388 மகிந்த 4262 சாவகச்சேரி மைத்திரி 23514 மகிந்த 5647 மானிப்பாய் மைத்திரி 26958 மகிந்த 7225 உடுப்பிட்டி மைத்திரி 18119 மகிந்த 3837 இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மைத்திரிக்கு 311,117 (56.16%) மகிந்த விற்கு 236,386 (42.67%) கிடைக்கபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி- யாழ்ப்பாணம் - 61% கிளிநொச்சி - 64% முல்லைத்தீவு - 73% வவுனியா -...

யாழ்ப்பாணம், கொடிகாமம், கச்சாய் பிரதேசத்தில் வாக்களிக்கச் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த சிலர், வாக்களிப்பு நிலையத்தில் நின்றிருந்த மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை காலை தமது வாக்ககளைப் பதிவுசெய்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாக்கை இன்று காலை தனது குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்துகொண்டார். இதேபோன்று பொது எதிரணி சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன் இன்று வியாழக்கிழமை (08) காலை முதல் வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு - 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் ஆங்கில செறிவூட்டல் 4 மாதகால பயிற்சி எதிர்வரும் 22ஆம் திகதி முதல் யாழ்.பொது நூலகத்தில் கற்பிக்கப்படவுள்ளதாக யாழ் அமெரிக்க தகவல் கூட அலுவலகம் புதன்கிழமை (07) தெரிவித்தது. ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்த பயிற்சிநெறியில் உயர்கல்வி கற்போரும் பாடசாலையை...

யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராம அலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும்...

பாரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தொிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உலகத்தில் எங்கு இடம்பெற்றாலும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட உலகம் ஒன்றாக சேரவேண்டும்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மெதமுன இல்லத்தில் இருந்து பேசும்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தின்...

வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.வாக்களிப்பை தவிர்ப்போம்.அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்று உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ்.குடாநாட்டில் பலபாகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள்...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு...

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். நாளையதினம (08) நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் இன்று (07) யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும்...

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த...

All posts loaded
No more posts