Ad Widget

‘கடூ­ழிய சிறை தண்­ட­னையாய் உணர்ந்தேன்’ : ஷிராணி உருக்கம்

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் 43 ஆவது பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க நேற்று நள்­ளி­ரவு 12.00 மணி­யுடன் தனது பத­வியில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்தார். புதுக்­கடை, உயர் நீதி­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நேற்று முற் பகல் இடம்­பெற்ற பிர­தம நீதி­ய­ர­சரின் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஓய்­வு­பெறும் வைப­வத்­தி­லேயே கலா­நிதி ஷிராணி பண்­டா­ர­நா­யக்க இதனை தெரி­வித்தார்.

shirani

2013 ஜன­வரி மாதம் 13 ஆம் திகதி தனக்கு விதிக்­கப்­பட்ட சட்ட விரோத தடை கார­ண­மாக 746 நாட்கள் தன்னால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரா­கவும்,பிர­தம நீதி­யர்­ச­ரா­கவும் செயற்­பட முடி­யாது போன­தா­கவும் இந் நாட்­களில் தான் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்கும் நில­மையை உணர்ந்­த­தா­கவும் இதன் போது 43 ஆவது பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டார நாயக்க மேலும் குறிப்­பிட்டார்.

பிர­தம நீதி­ய­ர­சரின் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஓய்­வு­பெறும் இந்த வைப­வத்தில் உயர் நீதி­மன்றின் ஏனைய 10 நீதி­ய­ர­சர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­த­துடன், மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­களும், மேல் நீதி­மன்றம்,மாவட்ட நீதி­மன்றம், நீதிவான் நீதி­மன்­றங்­களை சேர்ந்த நீதி­ப­தி­களும் கல்ந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அத்­துடன் சட்ட மா அதிபர், சொலி­சிற்ற ஜென­ரல்கள், பிரதி சொலி­சிற்ற ஜென­ரல்கள் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­துடன் சட்­டத்­த­ர­ணிகள் சம்ங்­கத்தின் உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட உத்­தி­யோ­க­பூ­ரவ, உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற சட்­டத்­த­ர­ணிகள் என நூற்­றுக்­க­ணக்க்­கானோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த இரு வரு­டங்­க­ளாக அடிப்­ப­டை­யற்ற குற்றச் சாட்­டுக்­களை என்­மீது முன் வைத்­தனர். அது­மட்­டு­மன்றி எனது கணவர் பிரதீப் காரி­ய­வசம், மகன் ஷவீன் மற்றும் எனது இளைய சகோ­தரி ரேனுகா ஆகி­யோரை பல்­வேறு விதங்­களில் இன்­னல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தினர். என்னை இலஞ்ச ஊழல் திணைக்­க­ளத்­திற்கும், மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்­துக்கும் இழுத்துச் சென்­றனர். என்னை குற்­ற­மற்­றவர் என நிரூ­பிக்க நான் அங்­கெல்லாம் செல்­ல­வேண்­டி­யி­ருந்­தது.

இதன் போது என்­னுடன் இருந்த சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய உள்­ளிட்ட அந்த சங்­கத்தின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஏனைய அனைத்து சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் பொது­மக்­க­ளுக்கும் நான் இந் நேரத்தில் நன்றி தெரி­விக்­கின்றேன்.

746 நாட்­க­ளுக்கு பின்னர் நான் மீண்டும் கட­மை­க­ளுக்கு சமூகம் தந்­துள்ளேன். என்னை சட்­டத்­துக்கு விரோ­த­மான முறையில் செயற்­பட்டு பிர­தம நீதி­ய­ர­ச­ராக செயற்­ப­டு­வதை தடுத்­தனர். எனினும் பொது­மக்கள் என்­னையே நீதி­யர்­ச­ராக நம்­பினர்.

1996 ஆம் ஆண்டு நான் முதன் முத­லாக நீதி­ய­ர­ச­ராக நிய­மனம் பெற்றேன். அன்ரு முதல் இன்று வரை 16 வரு­டங்கள் நான் நீதி­யர்­ச­ராக கட­மை­களை தொடர்ந்­துள்ளேன். 2011 ஆம் ஆண்டு நான் உயர் நீதி­மன்றின் பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மனம் பெற்றேன். 2013 ஜன­வரி மாதம் 13 ஆம் திகதி முதல் எனக்கு எதி­ரான நடவ்­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனது கட­மை­களை முன்­னெ­டுத்துச் செல்ல சட்ட விரோ­த­மான முறையில் எனக்கு தடைகள் விதிக்­கப்­பட்­டன.

இந்த இரண்டு வருடக் காலப்­ப­கு­தியில் அதா­வது, 746 நாட்­களில் நான் மிகவும் புண்­ப­டுத்­தப்­பட்டேன். அந்த இரு வரு­டங்­க­ளிலும் எவ்­வித ஆத­ரமும் இல்­லாத குற்­றச்­சாட்­டுக்கள் எனக்­கெ­தி­ராக முன் வைக்­கப்­பட்­டன. கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விப்­பது போன்று ஒரு அழுத்­த­து­ட­னேயே அவற்­றுக்கு நான் முகம் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. இப்­போது அந்த காலம் முடிந்­து­விட்­டது. நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது.

நான் தனிப்­பட்ட விட­யங்­க­ளுக்­காக இந்த இரு வரு­டங்­களும் போரா­ட­வில்லை. நீதி­மன்­றத்தின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காப்­ப­தற்­கா­கவே இந்த போராட்­டத்தை நான் முன்­னெ­டுத்தேன். அதன்­படி ஆரம்­பத்­தி­லி­ருந்து என்­னுடன் கைகோர்த்­தி­ருந்த, அனி­யா­யத்­துக்கு எதி­ராக எம்­முடன் சேர்ந்து குரல் எழுப்­பிய அத்­தனை பேரையும் நன்­றி­யுடன் நான் நினைவு கூறு­கின்றேன்.

நீதிச் சேவைக்குள் தகு­தி­யா­னவ்ர்­களே உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். நீதிச் சேவையின் சுயா­தீனம் பேணப்­ப­ட­வேண்டும். நான் இன்று இருக்­கலாம். நாளை இல்­லாமல் போகலாம். எனினும் எனது நாட்டு மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த இரு வரு­டங்­களில் பல்­வேறு பாதிப்­புக்கள் நீதிச் சேவையில் ஏற்­பட்­டி­ருக்­கலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு சுயாதீனமான நீதிச் சேவையை கிடைப்பதை நாம் உறுடி செய்ய வேண்டும்.

அந்த வகையில் நீதிமன்ற சுயாதீனத்துக்காகவே இந்த இரு வருடங்கள் போராடிய நான் இன்னும் ஒன்பது வருடங்கள் என்னால் பதவியில் இருக்க முடியுமாக இருந்த போதிலும் ஓய்வுபெறுகின்றேன். இதனையும் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கருத்தில் கொண்டே நான் முன்னெடுக்கின்றேன். என்னை தொடர்ந்து புதிய நீதியரசராக நியமனம் பெற உள்ள கே. ஸ்ரீபவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.என குறிப்பிட்டார்.

Related Posts