Ad Widget

சர்வமத குழு யாழுக்கு விஜயம்; மக்களது துன்பங்களையும் நேடியாக பார்வை

யாழ்ப்பாணத்திற்கு வந்த சர்வமத குழுவினரிடம் அரசியல் கைதிகள் விடுதலை ,மீள்குடியேற்றம் என்பன துரித கதியில் இடம்பெற வேண்டும். அதற்கு சர்வமத குழுவினரின் பங்களிப்பும் அவசியம் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமத குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து உயர்பாதுகாப்பு வலையம், நலன்புரி முகாம்கள் , முஸ்லிம் பிரதேசங்கள் ஆகியவற்றிற்குச் சென்று கள நிலைமைகளை நேரடியாக அறிந்து கொண்டனர்.

இதேவேளை யாழ். ஆயரையும் சந்தித்து இங்குள்ள நிலைமை தொடர்பிலும் கலந்துரையாடினர். அதன்போதே மேற்கண்ட விடயங்களை ஆயர் சர்வமத குழுவினரிடம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நேற்று மதியம் யாழ். நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்போது தெற்கில் இருந்து வருகை தந்த சர்வமத குழுவினர் இங்குள்ள மக்களின் நிலை குறித்து தாங்கள் நேரில் கண்ட விடயங்களை மிகவும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டனர்.

அத்துடன் மக்களது நிலங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினையும் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொருவரும் இங்குள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை அறிந்து கொண்டதுடன் ஆறுதல்களையும் மக்களுக்கு தெரிவித்துள்ளனர். எனவே இங்குள்ள மக்கள் நிலை குறித்து உண்மையான நிலவரங்களை தென்பகுதியில் உள்ள மக்களுக்கும், ஊடகங்களுக்கும் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts