பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச...

மாறுபட்ட விலை, நிறைகளில் நெல் கொள்வனவு

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன்...
Ad Widget

மீனவரின் படகை மோதிய கடற்படையினர் 8பேர் கைது

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கியூ.ஆர்.பெரேரா தெரிவித்தார். கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இரவு, எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது,...

யோஷித தப்பிக்கவில்லை, திரும்பி வருவார் என்கிறார் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமாகியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாக செவ்வாயக்கிழமை (10) இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 653 என்ற விமானத்திலேயே அவர் டுபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

ஏப்ரல் முதல் அதிகரிக்கிறது ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு

2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் என்று அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 2,500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தும்...

யாழ் தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் ஐயப்பாடுகள்

இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மிள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று...

கண்டாவளை பிரதேச செயலரை மாற்றும்படி கோரிக்கை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தனை மாற்றும்படி நாதன்திட்டம் மற்றும் புன்னைநீராவி மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் புதன்கிழமை (11) கோரிக்கை முன்வைத்தனர். தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவிலே பொதுமக்கள் இந்தக்கோரிக்கையை முன்வைத்தனர். எல்லா விதத்திலும் தங்களை அவர் புறக்கணிப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு பின்னால்...

வாழைக்குலை வியாபாரி வீதியில் விழுந்து மரணம்

சாவகச்சேரி சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்யும் வியாபாரியொருவர், புதன்கிழமை (11) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக திடீரென விழுந்து மரணமாகினார். கைதடி மத்தி குமரன் நகரைச் சேர்ந்த சி.சின்னத்தம்பி (வயது 57) என்பவரே இவ்வாறு மரணமடைந்தார். வீட்டிலிருந்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்ற இவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கீழே வீழ்ந்து...

லஞ்ச, ஊழல்கள் ஒழிப்புப் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் நியமனம்

லஞ்ச ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழவின் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை காலை வழங்கினார்.

மேல்முறையீட்டு நீதிதிமன்ற நீதிபதியாக ஹேமா நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஹேமா குமுதினி விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயக்கோன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

வலி. வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருகம்பனை பிரதேச மக்களின் நன்மை கருதி வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆயுள் வேத வைத்தியசாலை இன்று புதன்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தனியார் கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆயுள் வேத வைத்தியசாலையை...

ஆறாவது திருமணத்துக்கு தயாரான சுவிஸ் கல்யாண இராமன் கைது

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது, '56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய...

யாழில் 80 பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணத்தின் மூன்று பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 80 பொலிஸார் தென் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் இடமாற்றத்தின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (10) அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 34பேரும், நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 27பேரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த...

சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிரந்தர தீர்வு வேண்டும் – எஸ்.சிறிதரன்

70 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்ற இலங்கை இனப்பிரச்சனைக்கு, சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு தீர்வு காணப்பட்டு தமிழர்கள் வடக்கு - கிழக்கில் நிம்மதியாக வாழ்கின்ற நிலை உருவாகுவதற்கு பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் மற்றும் சிறிதரன்...

பயனாளிகளுக்கு வழங்கப்படாமலுள்ள வாழ்வாதார பொருட்கள்

வாழ்வாதார வசதி குறைந்த பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் காரைநகர் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள், தையல் இந்திரங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் ஆகியன இன்னமும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை என காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் வீரமுத்து கண்ணன் புதன்கிழமை (11) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த...

திஸ்ஸவுக்கு பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது.

ICTA புதிய தலைவராக சித்ராங்கனி முபாரக்!

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் மாற்றத்துடன் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) தலைவர் பதவி மற்றும் பணிப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் புதிய தலைவராக நியமிக்கப்ட்டுள்ள திருமதி சித்ராங்கனி முபாரக் நேற்று முன்தினம் (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முகாமைத்துவ பணிப்பாளராக...

வரவுசெலவு திட்ட சலுகைகள் வழங்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யலாம்

இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சரியான முறையில் கிடைக்காமை தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம். 0112 399 146, 0771 088 922 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ,இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்ச்சியாக...

வட மாகாண சபை பிரேரணை பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் – இந்தியா!

இலங்கை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச இன அழிப்பு விசாரணை சவாலுக்கு உட்படுத்துமானால் அது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக்கூடியதாக அமையும் என்றும் அந்த பாதிப்பு...
Loading posts...

All posts loaded

No more posts