- Saturday
- July 19th, 2025

தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சுதந்திரதின...

கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்புணர்த்தியுள்ளது. உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி...

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களின் பயன்பாட்டுக்கெனப் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று புதன்கிழமை (11.02.2015) நடைபெற்ற வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் வாகனங்களைக் கையளித்துள்ளார். வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு உட்பட்ட கால்நடை அபிவிருத்திச் சுகாதாரத் திணைக்களத்தில் வாகனங்களுக்குப் பற்றாக்குறைவு...

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஜெகூவுக்கு உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி முகாமைத்துவ உதவியாளர், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின்...

அவுஸ்ரேலியா இருந்து இலங்கை வருகை தந்தவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து கடந்த 2012 /8/12 படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று இரண்டரை வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பி வந்தவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு...

தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 74 படகுகளையும் விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில்உள்ள படகுகளை விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை இந்தியத் தூதரக அதிகாரிகளிடம்...

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 4 விதமான கடன்திட்டத்தில் 290 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட முகாமையாளர் ரவீந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2014 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 4 வகையான கடன்திட்டங்களின் ஊடாக 290 வீடுகள் அமைக்கப்பட்டது. அதற்கமைய பரந்த அடிப்படையிலான...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சி அக்கறை காட்டவில்லை என தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவரும் பேராசிரியருமான சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதில் ஈடுபாடு காட்டும் முன்னாள் போராளிக் குழுவின் தலைவரும் புலம்பெயர் அமைப்புக்களும் பலமுறை...

யாழ். மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் 45 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் வியாழக்கிழமை (12) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஓரளவான விலைக்குறைப்புக்கள் நடைபெற்று வருகின்றன. முறைப்பாடு கிடைகப்பெறும் கடைகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு கடைகளின்...

யாழ்ப்பாணம், பொம்மைபெவளி பிரதேச இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 8 பயனாளிகளையும் உடனடியாக அந்த பட்டியலில் இணைத்து அவர்களுக்கான வீட்டு வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உரிய அதிகாரிகளுக்கு நேற்று புதன்கிழமை (11) பணிப்புரை விடுத்தார். இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்ட 8 பயனாளிகளின் பிரச்சினை தொடர்பில்...

பிரதேச செயலகங்கள் மக்களின் பணியோடு நின்றுவிடாமல் சமூக பணியுடன் கலை பண்பாடுகளையும் பாதுகாக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற பண்பாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, எமது மாவட்டம் பல...

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த மக்களின் பிரச்சினைகள் சுமூகமான முறையில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். மல்லாகம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் புதன்கிழமை (11) பாடசாலை...

புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி, பாடசாலை அதிபர் க.கண்ணன்...

மகா சிவராத்திரி தினத்தை வர்த்தக விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை கடிதம் புதன்கிழமை (11) அனுப்பி வைத்துள்ளது அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சிவராத்திரியானது இந்துக்களின் மிகமுக்கிய மத தினமாக உள்ளது. இலங்கையிலுள்ள...

2015 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று பெப்ரவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் ஜனாநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு...

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த...

யாழ். கைதடி - கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை உடற்கல்வித்துறை ஆசிரிய பயிலுநரான கிளிநொச்சியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கிருஷ்ணன் றீகன் என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....

யாழ். மாநகரசபை வட, கிழக்கு மாகாண தொழிலாளர் சங்கத்தின் 40 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் நாவலர் கலாசார மண்டபத்தில், புதன்கிழமை (11) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மாநகரசபை நீதியாக செயற்பட வேண்டும் என்று பல தடவைகள் குரல் கொடுத்து பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினோம்....

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச...

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன்...

All posts loaded
No more posts