Ad Widget

மஹிந்த, கம்மன்பில, விமல் ஆகியோரின் முகப்புத்தகங்கள் மீது சைபர் தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் முகப்புத்தக பக்கங்கள், சைபர் தாக்குதல்களால் முடக்கப்பட்டுள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

உதய கம்மன்பிலவின் முகப்புத்தக பக்கத்துக்கான விருப்புகள், கடந்த வெள்ளிக்கிழமை 7 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1,200 ஆல் குறைவடைந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் முகப்புத்தக பக்கங்களையும் சோதனை செய்தோம். இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதியின் முகப்புத்தக விருப்பங்;களில் 15,800 உம், நாடாளுமன்ற உறுப்பினரின் முகப்புத்தக விருப்பங்களில் 4,100உம் குறைந்திருந்தன.

முகப்புத்தகத்தில் விருப்புகள் அதிகரிப்பது குறைவதும் பொதுவான விடயமாகும். ஆனால், ஒரே நேரத்தில் பெருமளவான விருப்புகள் கடுமையாக குறைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படும் என்று பிவிதுரு ஹெல உறுமய குறிப்பிட்டது.

மேலும், இணையத்தளத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி, இந்த 3 அரசியல் வாதிகளின் அரசியலை வீழ்த்தச்செய்யும் இந்த சதி வேலைக்கு எதிர்க்கட்சியே காரணமாக இருக்கலாம் என்றும் பிவிதுரு ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.

Related Posts