தண்ணீர் பருகிய 26 மாணவர்களுக்கு மயக்கம்

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையை சேர்ந்த 26 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை (19) காலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நீர்த்தாங்கியிலிருந்த நீரைப் பருகிய 26 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts