Ad Widget

தண்ணீர் தாங்கியில் நஞ்சு கலப்பு: பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 'மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது...

தண்ணீர் தாங்கியின் அருகிலிருந்து நஞ்சுப் போத்தல் மீட்பு

யாழ்ப்பாணம், ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையின் தண்ணீர் தாங்கியினுள் நஞ்சு கலந்தமையால் அதனை பருகிய 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் மூவர், சுயநினைவை இழந்துள்ளனர் என்றும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. மேற்படி...
Ad Widget

தண்ணீர் பருகிய 26 மாணவர்களுக்கு மயக்கம்

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையை சேர்ந்த 26 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை (19) காலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நீர்த்தாங்கியிலிருந்த நீரைப் பருகிய 26 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.