- Wednesday
- November 12th, 2025
இன்ரர்போல் பொலிஸார் இலங்கைக்குள் இலகுவாக வந்து விசாரணைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட 'விஸா' வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்ரர்போல் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த விசேட விஸா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்ரர்போலின் விசாரணைகளுக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு சில நாடுகளே விசேட விஸா அனுமதியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய பதில்களை அனுப்பாது காலம் தாழ்த்துகின்றன எனவும், இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- மாகாண சபையில் தீர்மானம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதை முறையில் தலைக்கவசத்தால் பின்தலையில் அடித்து உடைத்த சம்பவம் நேற்று மாலை 3மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தால் ஏனைய பல்கலை மாணவர்களும் பயத்தின் நிமித்தம் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது என்று வடக்கு மாகாண முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில்மேலும்...
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. இன்று (10) வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர். பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000...
தென்மராட்சி – மட்டுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதே தினத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் நேற்றய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்...
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தெற்கின் பேரினவாத கட்சிகள் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தமிழர் ஒருவருக்கு வழங்குவதனை விரும்பவில்லை என...
19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை சபையில் நிறைவேற்றியதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலநறுவையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டின் எதிர்காலம் குறித்து தாம்...
கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக் கொண்டோம். இவ்வாறு தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 07.04.2015...
மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) யாழ் மாவட்டத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வில் திறந்துவைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மங்கள விளக்கை இராமலிங்கம் சந்திரசேகரம், விமல் ரட்ணாயக்கா, யாழ்ப்பாணம் தொகுதி அமைப்பாளர் அ.கணபதிப்பிள்ளை உட்பட...
வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தாயார் வீட்டில் இருந்த சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்...
10 பிள்ளைகளுக்கு மேல் பெற்ற 75 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், ஒக்டோபர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள சர்தேச முதியோர் தின நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சனத்தொகைச் சுருக்கம் ஏற்பட்டுவரும் நிலையில் அதிக பிள்ளைகளைப் பெறும் தாய்மாரை ஊக்குவிக்கும் நோக்குடன் சமூக...
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை, வியாழக்கிழமை(09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் 11...
மதமானது மக்களைப் பிரித்தல் ஆகாது. எல்லோரையும் மதித்து மாண்புற்று வாழ வழிவகுக்க வேண்டும். சமய ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மானிப்பாய் மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் கல்லூரி மண்டபத்தில் புதன்கிழமை (08) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இழிநிலை அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (08) தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,...
கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாதிருந்த சமூர்த்திக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் அந்தந்த சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும் என வாழ்வின் எழுச்சித்திட்ட யாழ்.மாவட்ட பணிப்பாளர் கா.மகேஸ்வரம் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திலுள்ள சமூர்த்திப் பயனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக சமூர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அவர்களுடைய சமூர்த்திக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 9, 10 மற்றும் 11ஆம்...
19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பிரதமர்...
ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று முன்தினம் புதன்கிழமை (08.04.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில்...
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந.லோகதயாளன் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் இன்று பிற்பகல் விளக்கமறியலுக்குள் தள்ளப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நெல்லியடிப் பொலிஸாரால் விசாரணைக்கு என அழைக்கப்பட்டிருந்த அவர், பிற்பகல் 2 மணியவில் பருத்தித்துறை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்வரும்...
சுன்னாகத்தில் உள்ள நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனத்தை காலவரையறையின்றி மூடவூம், அதன் ஊழியர்களை வெளியேற்றவும் மல்லாகம் நீதவான் நீதிமன்று கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. அதன் பிரகாரம் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தமது நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தனது ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வேலைக்குத்...
Loading posts...
All posts loaded
No more posts
